கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இராஜேந்திரம் குள்ளமுத்து மாரியம்மன் கோவிலில் இன்று 52 ஆம் ஆண்டு பால்குட பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இராஜேந்திரம் காவிரி நதிக்கரைக்கு சென்ற பக்தர்கள் நீராடி, பால் குடம், பன்னீர் குடம், சந்தனக் குடம், தீர்த்தக்குடம் ஆகியவற்றை மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து சாமி தரிசனம் செய்தனர்.