கரூர் மாவட்டம் குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை தமிழ் 3ம் ஆண்டு மாணவர் ஜீவானந்தம், தஞ்சாவூரில் நடைபெற்ற மாநில அளவிலான பாரா விளையாட்டு போட்டியில் குண்டு எறிதல் மற்றும் நீளம் தாண்டுதல் போட்டிகளில் முதலிடம் பெற்று 2 தங்கப் பதக்கங்களையும், 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாம் இடம் பெற்று ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் வென்று சாதனை படைத்துள்ளார். இந்த மாணவரை கல்லூரி முதல்வர் முனைவர் சுஜாதா மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.