செவிலியர் ரம்யா அனைவரையும் வரவேற்றார். இம்முகாமில் குளித்தலை வட்டார மருத்துவ அலுவலர் சிவக்குமார், பல் மருத்துவர் டாக்டர் சபரீஷ், டாக்டர் ஹேமாவதி ஆகியோர் சர்க்கரை நோய், ரத்த சோகை நோய் புற்றுநோய், வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் எவ்வாறு பரவுகிறது எதனால் பரவுகிறது இதை கட்டுப்படுத்துவது எப்படி இதற்குரிய சிகிச்சைகள் எங்கு பெறவேண்டும் என்பது குறித்து விளக்கம் அளித்து பேசினார்கள். இதில் குளித்தலை நகராட்சி அலுவலகத்திற்கு உட்பட்ட அலுவலர்கள், துப்புரவு பணியாளர்கள், நகராட்சி ஒப்பந்த தொழிலாளர்கள், மகளிர் சுய உதவி குழு பெண்கள் என 300-க்கும் மேற்பட்டோருக்கு இம்முகாமில் பரிசோதனை செய்யப்பட்டது. முடிவில் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் சரவணன் நன்றி கூறினார்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்