குளித்தலையில் வாலிபரை மறித்து கல்லால் தாக்கிய சம்பவம்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வதியம் அடுத்த கீழகுறப்பாளையத்தை சேர்ந்தவர் துரைராஜ் மகன் வினித் 23. இவர் நேற்று கீழவதியம் பகுதியில் உள்ள ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் குட்டி குடி திருவிழாவிற்கு சென்று விட்டு நடுவதியம் சாலையில் பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த தரணி மற்றும் பெயர் விலாசம் தெரியாத மற்றொரு நபர் சேர்ந்து வழிமறித்து எங்கள் தெருவில் வேகமாக ஏன் செல்கிறாய் என தகாத வார்த்தையால் திட்டி கீழே கிடந்த கல்லால் தாக்கியுள்ளனர். காயம் அடைந்த வினித் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று புகார் அளித்துள்ளார். குளித்தலை போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி