இந்த நிலையில் தனக்கு போட்டியாக கடை நடத்துவதாக சரவணன் வைத்திருக்கும் பூஜை கடை நோக்கி சிமெண்ட் கல்லை எடுத்துக்கொண்டு தனது மகளுடன் கடைக்குள் புகுந்து சரவணன் கடையில் இருந்த கண்ணாடி ஷோகேசுகள், பிரிட்ஜ் மற்றும் பூஜை பொருட்களை அடித்து உடைத்தும் அங்கிருந்த பொருட்களையும் எடுத்து வீசி சேதப்படுத்தி கடை வெளியே நின்று நான் 16 லட்சத்தில் ஏலம் எடுத்து அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துள்ளேன் என லட்சுமி தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
இந்த சம்பவத்தை சரவணன் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து குளித்தலை காவல் நிலையத்தில் தற்போது புகார் அளித்துள்ளார். போலீசார் தற்போது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.