கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சிக்குட்பட்ட மணத்தட்டை பகுதியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.13.04 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காணொளி காட்சி வாயிலாக மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்நிகழ்வில் குளித்தலை நகர் மன்ற தலைவர் சகுந்தலா, நகராட்சி ஆணையர் சுதர்சன், பொறியாளர் தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.