கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நல்லூர் கலிங்கப்பட்டியைச் சேர்ந்த சீதாராமன் (52) என்பவர், வைக்கோல் சுருட்டும் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்யும் போது, எதிர்பாராத விதமாக அவரது இடது கை இயந்திரத்தில் சிக்கி துண்டானது. திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர் புகார் அளித்துள்ளார். இது குறித்து நங்கவரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.