கரூர்: முன்னாள் எம்எல்ஏ மறைவு; முதல்வர் இரங்கல்

கரூர் மாவட்டம் குளித்தலை தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் அறிக்கை: குளித்தலை சட்டமன்றத் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம். கந்தசாமி நேற்று முன்தினம் மறைந்தார் என்று அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். அண்ணா தலைமையில் திமுக முதன்முதலாக ஆட்சியைப் பிடித்து இந்திய அரசியல் களத்தில் மிகப் பெரும் மாற்றத்துக்கு வித்திட்ட 1967ம் ஆண்டு சட்டமன்றப் பொதுத்தேர்தலிலும், கலைஞர் தலைமையில் எதிர்கொண்டு வரலாறு காணாத வெற்றியைப் பெற்ற 1971ம் ஆண்டு சட்டமன்றப்பொதுத் தேர்தலிலும் குளித்தலை தொகுதியில் வென்ற பெருமைக்குரியவர் ஆவார். 

அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், குளித்தலை தொகுதி கழகத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதேபோல் குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி உள்ளிட்ட கரூர் மாவட்ட திமுக நிர்வாகிகள் பலரும் மறைந்த கந்தசாமி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி