கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர்மலையில் 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ரெத்தினகிரிஸ்வரர் திருக்கோவிலில், கார்த்திகை மாத சோமவார விழாவையொட்டி இன்று ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 1178 அடி உயரத்தில் 1017 படிக்கட்டுகளைக் கொண்ட இந்த புகழ்பெற்ற சிவஸ்தலத்தில் ஆண்டுதோறும் இந்த விழா சிறப்பாக நடைபெறும்.