குளித்தலை அருகே, மதுபோதையில் மனைவியிடம் தகராறு செய்து, அவரது தாலியைப் பறித்த மோகன்ராஜை, அவரது மகன் மணிகண்டன் இரும்பு ராடால் அடித்துக் கொன்றார். மோகன்ராஜ் அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவி பூவாயிடம் சண்டையிட்டு வந்துள்ளார். இதனால் பூவாயி தனது மகனுடன் தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், மே 26 மோகன்ராஜ் மாமியார் வீட்டிற்கு சென்று பூவாயியின் தாலியைப் பறித்துள்ளார். இதைத் தட்டிக் கேட்ட மகன் மணிகண்டன் இரும்பு ராடால் தந்தையைத் தாக்கியதில் மோகன்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.