சின்னப்பனையூரில் அமைக்கப்பட்டு வரும் துணை மின் நிலையத்திற்கு விவசாய நிலங்களுக்கு இடையே சுமார் 17 உயர மின் கோபுரங்கள் அமைக்கும் பணி கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. மின்வாரிய அலுவலர்கள் மின் கோபுரம் அமைக்கும் விவசாயிகளிடம் எந்தவித அனுமதியும் பெறாமல் விவசாய நிலங்களையும் மற்ற விவசாய பயிர்களைச் சேதப்படுத்தி வாகனங்கள் மூலம் உயர மின் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கலா என்பவரின் விவசாய நிலத்தில் உயர மின் கோபுரங்கள் அமைக்க கலாவிடம் அனுமதி இல்லாமல் விவசாய பயிர்களைச் சேதப்படுத்தியும் மின் கோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டதை அறிந்த கலா மற்றும் அவரது மகன் இருவரும் தனது விவசாய நிலத்தில் சேதப்படுத்தியது குறித்தும் மேலும் என் விவசாய நிலத்தில் உயர மின் கோபுரம் அமைக்க கூடாது என புகார் தெரிவித்து பணியைத் தடுக்க முயற்சி செய்தார். அதனை எடுத்து குளித்தலை போலீசார் அறிவுறுத்தலின் பேரில் முறையாக அனுமதி பெற்று பணிகளைச் செய்யுங்கள் என கூறியதை எடுத்து மின் கோபுரம் அமைக்கும் பணியாளர்கள் பணியை நிறுத்தி அங்கிருந்து சென்றனர்.