கரூர் மாவட்டம் குளித்தலை காந்தி சிலை முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் மாவட்டத் துணைத் தலைவர் சங்கரநாராயணன், மாவட்ட துணை செயலாளர் செல்வம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய அரசின் உரம் விலை உயர்வை உடனே ரத்து செய்யவும், விவசாய கூட்டுறவு பயிர் கடன்களை தமிழக அரசு தள்ளுபடி செய்யக் கோரியும் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.