குளித்தலை அரசு கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரூர் மாவட்டம் குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கல்லூரி முதல்வர் சுஜாதா தலைமையில் நடைபெற்றது. இதில் மாணவிகள் சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல் வைத்து கொண்டாடினர். மாணவர்கள் வேஷ்டி, மாணவிகள் சேலை அணிந்து தமிழர் பண்பாட்டுடன் பொங்கல் பண்டிகையை சிறப்பித்தனர். இந்த நிகழ்வுக்கு மின்னணுவியல் துறை தலைவர் அன்பரசு உள்ளிட்ட பேராசிரியர்கள், மாணவர்கள் ஏற்பாடு செய்தனர்.

தொடர்புடைய செய்தி