குளித்தலை நகர்மன்ற உறுப்பினர்களுக்கான அவசரக் கூட்டம்

கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சி கூட்ட அரங்கில் நகர் மன்ற தலைவர் சகுந்தலா பல்லவிராஜா தலைமையில் இன்று நகர் மன்ற உறுப்பினர்களுக்கான அவசர கூட்டம் நடைபெற்றது. இதில், நகராட்சி எல்லைக்கு உட்பட்ட குயவர் தெருவில் ரூ. 3 லட்சத்தில் சிமெண்ட் சாலை அமைக்கவும், சத்திரம் தெருவில் கோடைகால குடிநீர் பற்றாக்குறையை தவிர்க்கும் பொருட்டு மினி பவர் பம்ப் மற்றும் சின்டெக்ஸ் டேங்க் அமைக்கும் பணி மேற்கொள்ள ரூ. 2 லட்சத்திற்கு பணி மேற்கொள்ளுதல் உள்ளிட்ட 5 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகர் மன்ற துணை தலைவர் கணேசன், புதியதாக பொறுப்பேற்ற நகராட்சி ஆணையர் சுதர்சன், நகராட்சி பொறியாளர் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்புடைய செய்தி