கரூர்: 2 பைக்கில் மோதிக்கொண்ட விபத்து.. முதியவர் படுகாயம்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கழுகூர் ஊராட்சி மாரி பாறைப்பட்டியைச் சேர்ந்தவர் கணேசன் 70. இவர் கடந்த 16ஆம் தேதி அன்று தனது நண்பர் ரவி என்பவரின் பைக்கில் பின்னால் அமர்ந்து கொண்டு அ. உடையாபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி அருகே சாலையில் சென்றுள்ளார். அப்போது முன்னாள் சென்ற பைக் எந்தவித சைகை செய்யாமல் வலது புறம் திருப்பியதில் இரண்டு வாகனங்களும் மோதி விபத்தானது. இதில் கணேசன் படுகாயம் அடைந்து மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். கணேசன் புகாரின் பேரில் விபத்தை ஏற்படுத்திய சுரேஷ் என்பவர் மீது தோகைமலை போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி