குளித்தலையில் திமுக நகர மகளிர் அணியினர் கொண்டாட்டம்

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், மூன்று மாத தொகை மற்றும் கோடைகால சிறப்புத் தொகுப்பு என மொத்தம் ரூ.5000 பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, கரூர் மாவட்டம் குளித்தலை பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு, குளித்தலை நகர் மன்ற தலைவர் சகுந்தலா தலைமையில் திமுக நகர மகளிர் அணியினர் மற்றும் நிர்வாகிகள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். மகளிருக்கு கோடைகால சிறப்புத் தொகுப்புடன் மகளிர் உரிமைத்தொகை வழங்கியதற்கு தமிழக முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்து கோஷங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி