குளித்தலை நீதிமன்றம் முன்பு திமுகவினர் கொண்டாட்டம்

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அனுமதி தராமல் நிறுத்தி வைத்திருந்த, 10 மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்தது. மேலும், ஆளுநருக்கு எந்த தனிப்பட்ட அதிகாரங்களும் இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

இதனை கொண்டாடும் விதமாக கரூர் மாவட்டம் குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு திமுக வழக்கறிஞர் சங்கத் தலைவர் சாகுல் ஹமீத் தலைமையில் திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். 

இதில் அரசு வழக்கறிஞர் நீலமேகம் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள், இளம் வழக்கறிஞர்கள் என பலரும் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.

தொடர்புடைய செய்தி