அதேபோல் பெரியபாலம் பேருந்து நிறுத்தம் அருகே திமுக மாநில வர்த்தக அணி சார்பில் மாநில வர்த்தக அணி துணை செயலாளர் பல்லவி ராஜா தலைமையில் கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர். பிறகு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் நகர மன்றத் தலைவர் சகுந்தலா, மாநில செயற்குழு உறுப்பினர் சிவராமன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜாபருல்லா, நகரப் பொருளாளர் தமிழரசன், நகரத் துணைச் செயலாளர் செந்தில்குமார், இன்ஜினியர் கணேசன், நகரத் தொண்டர் அணி அமைப்பாளர் மது உள்ளிட்ட நகர திமுக நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.
கருணாநிதியின் 102வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கரூர் மாவட்டம் குளித்தலை பெரியபாலம் பேருந்து நிறுத்தம் அருகே ககருணாநிதியின் திரு உருவப் படத்திற்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர். இதில் குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம், நகர மன்றத் தலைவர் சகுந்தலா உள்ளிட்ட நகர திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.