கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கந்தன்குடி அய்யனூர் ஆனைகவுண்டனூர் ஆகிய ஊர்களை சேர்ந்த பக்தர்கள் ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் திருவிழா முன்னிட்டு குளித்தலை காவேரி ஆற்றில் இருந்து தீர்த்த குடம் பால்குடம் என 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் குளித்தலை முக்கிய வீதி வழியாக அய்யர்மலை சிவாலயம் வழியாக மேளதாளங்கள் முழங்க கோவிலுக்கு வந்தடைந்தனர். அதன் பின்னர் கோவிலை சுற்றி வலம் வந்தனர். ஸ்ரீ பகவதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அவர்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். அதன் பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.