மக்களுக்கான ஒன்றிய அரசா, மக்களுடன் ஒன்றாத அரசா, சிறுபான்மை மக்கள் உரிமைகளை சிதைக்காதே, மத வேற்றுமையை விதைக்காதே, சட்ட திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்ப பெறு, இஸ்லாமியர்களின் உரிமைகளை பறிக்காதே என்ற பதாதைகளை ஏந்தியவாறு தமிழக வெற்றிக் கழகம் கட்சியினர் கண்டன கோஷங்களை எழுப்பினர். குளித்தலை நகர நிர்வாகி விஜய் இந்த ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாட்டினை செய்திருந்தார். இந்நிகழ்வில் குளித்தலை ஒன்றிய நிர்வாகி நிரேஷ்குமார், தோகைமலை ஒன்றிய நிர்வாகி சந்தோஷ்குமார், கிருஷ்ணராயபுரம் ஒன்றிய நிர்வாகி முத்துக்குமார், கடவூர் ஒன்றிய நிர்வாகி அரவிந்த், மகளிர் அணி நிர்வாகி அம்பிகா ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னிலை வகித்தனர்.
மேலும் குளித்தலை நகர, ஒன்றிய, தோகைமலை ஒன்றிய, கிருஷ்ணராயபுரம் ஒன்றிய, கடவூர் ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.