கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தண்ணீர்பள்ளி மற்றும் இராஜேந்திரம் காவிரி ஆற்றில் நாணல் செடிகள் மற்றும் கருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்து காடு போல் காட்சியளிக்கிறது. இதனால் மழைக்காலங்களில் வெள்ள நீர் தேங்கி, தண்ணீர் சீராக செல்ல முடியாத நிலை ஏற்படும் என அச்சம் நிலவுகிறது. இது குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க குளித்தலை சமூக ஆர்வலர் அப்துல் ரஹீம் கோரிக்கை விடுத்துள்ளார்.