கரூர் மாவட்டம் குளித்தலை அருகே புனவாசிப்பட்டி ஜானகிபுரம் பகுதியைச் சேர்ந்த 73 வயதான கைலாசம், நேற்று முன்தினம் தனது சைக்கிளில் சென்றபோது, அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் ஓட்டி வந்த பைக் மோதியதில் கீழே விழுந்து காயமடைந்தார். 108 ஆம்புலன்ஸ் மூலம் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கைலாசம் அளித்த புகாரின் பேரில், லாலாபேட்டை போலீசார் இன்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.