கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ஐநூற்று மங்கலம் பகுதியைச் சேர்ந்த நடராஜ் (70) என்பவர், தனது சைக்கிளில் சிந்தலவாடி பகுதிக்குச் சென்று கொண்டிருந்தபோது, லாலாபேட்டை மேம்பாலம் அருகே நெடுஞ்சாலையில் எதிரே வந்த தனியார் பேருந்து அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த நடராஜ், 108 ஆம்புலன்ஸ் மூலம் குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.