துவக்கி வைத்த அங்கன்வாடி மைய கட்டிடத்திற்குள் குழந்தைகள் கற்பதற்காக வரையப்பட்டு இருந்த தேசியக்கொடி, தேசியத் தலைவர்களின் படங்கள், ஆங்கில மாதங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் பெயர்கள் எழுதப்பட்டிருந்த எழுத்துக்களில் பிழைகள் இருந்ததால் கல்வியாளர்கள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மழலைச் செல்வங்கள் கற்றுக் கொள்வதற்காக வரையப்பட்ட வரைபடங்களில் இத்தனை பிழைகளா.? என்று கேள்வி எழுப்பினர்.
திறப்பு விழாவில் கலந்து கொண்ட குளித்தலை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார், குளித்தலை வட்டார ஊட்டச்சத்து அலுவலர் வினோதினி ஆகியோர் அதனை கண்டும் காணாதது போல் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.