கரூர் மாவட்டம் சிந்தலவாடி ஊராட்சி விட்டுகட்டியில் இருந்து கீழ சிந்தலவாடியை இணைக்கும் 460 மீட்டர் தார்ச்சாலையானது சேதம் அடைந்து காணப்பட்டது. முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 26.18 லட்சம் மதிப்பில் சிறு பாலத்துடன் சாலையை மேம்படுத்த கடந்த மார்ச் மாதம் பூமி பூஜையிட்டு பணிகள் துவங்கப்பட்டன. பணிகள் செப்டம்பர் மாதமே முடிவுற்றதாக பலகையில் தகவல் வைக்கப்பட்டிருந்தாலும், 2 மாதங்களாகியும் தார் சாலைகள் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.