குளித்தலையில் ஆணையர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு

கரூர் மாவட்டம் குளித்தலையில், நகராட்சி ஆணையர் சுதர்சன் தலைமையில் தூய நகரப் பேரணி நேற்று (மே 21) நடைபெற்றது. குளித்தலை பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு தொடங்கிய இந்தப் பேரணி, பேராளம்மன் கோவில் தெரு, கடைவீதி, பஜனைமடம் வழியாக நகராட்சி அலுவலகத்தை வந்தடைந்தது. பேரணியில் பங்கேற்றவர்கள் பதாதைகளை ஏந்தி, குப்பை கொட்டுதலுக்கு எதிரான முழக்கங்களுடன் உறுதிமொழி ஏற்றனர்.

தொடர்புடைய செய்தி