கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கோடங்கிபட்டியில் உள்ள திருவேங்கடம் - லதா என்ற வயதான தம்பதியரின் வீட்டிற்கு மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் திடீர் சோதனை நடத்தினர். 4 கார்களில் வந்த 10 அதிகாரிகள், தம்பதியரின் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த ஈச்சர் வேனில் செம்மரக் கட்டையை கடத்தி வந்ததாக சோதனை மேற்கொண்டனர். இந்த திடீர் சோதனையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.