மத்திய அரசின் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தோகைமலை பேருந்து நிலையம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தோகைமலை ஒன்றியத்தின் சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் இன்று நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஒன்றிய செயலாளர் முனியப்பன் தலைமை வகித்தார். மத்திய அரசை கண்டித்து தப்பாட்டம் செய்து நகல் எரிப்பு போராட்டம் செய்ய முயன்றவர்களை போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு அனைவரும் கைது செய்யப்பட்டனர். கைதான 20 நபர்களும் காவல் வாகனத்தில் ஏற்றப்பட்டு ரஜினி திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி