முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, கரூர் மாவட்டம் குளித்தலை நீதிமன்ற வளாகத்தில் அதிமுக வழக்கறிஞர்கள் ஜெயலலிதா திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும், பேருந்துகளில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் வழக்கறிஞர் சங்க செயலாளர் நாகராஜன், மூத்த மற்றும் இளம் வழக்கறிஞர்கள் பலர் கலந்துகொண்டனர்.