குளித்தலை காவிரி கரை பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் ஆற்றில் இறங்குவதை தடுக்கும் பொருட்டும் வருவாய் துறையினர், காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை கரூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் நில நிர்வாக ஆணையருமான டாக்டர் பழனிச்சாமி நேரில் பார்வையிட்டு இன்று ஆய்வு செய்தார்.
மேலும் வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரியிடம் கேட்டறிந்து காவிரியில் புதைமணல் மற்றும் ஆழமான பகுதிகள் உள்ளதால் பொதுமக்கள் இறங்காதவாறு கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளார்.