குளித்தலையில் காவிரி விழிப்புணர்வு துலா தீர்த்த ரத யாத்திரை

அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் மற்றும் அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை இணைந்து 15 ஆம் ஆண்டு காவிரி விழிப்புணர்வு துலா தீர்த்த ரத யாத்திரையை தலைக்காவிரி முதல் பூம்புகார் வரை நடத்துகிறது. அகில பாரதிய சன்னியாசிகள் சங்கத்தின் பொருளாளர் சிவராம நந்தா தலைமையில் மாதாஜி மற்றும் துறவிகள் இந்த யாத்திரையை வழிநடத்துகின்றனர். குளித்தலை வந்த ரத யாத்திரைக்கு அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை இணைச் செயலாளர் அருள்வேலன்ஜி தலைமையில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. காவிரி ஆற்றில் பூஜைகள் செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி