கரூர்: பாதை பிரச்சனையில் தகராறு; மூன்று பேர் மீது வழக்கு

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நங்கவரம் பேரூராட்சி மாடுவிழுந்தான் பாறையைச் சேர்ந்தவர் ராணி 50. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன், ஹேமமாலினி, ஆறுமுகம் ஆகியோருடன் பாதப் பிரச்சனையில் முன்விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில் கடந்த வருடம் மார்ச் 28ஆம் தேதி, மூன்று பேரும் ராணியை தகாத வார்த்தைகளால் திட்டியும், அவரது கணவர், மகனை கட்டையால் அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து ராணி குளித்தலை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அதனைத் தொடர்ந்து குளித்தலை நீதிமன்றத்தில் வந்த உத்தரவின்படி மூன்று பேர் மீது குளித்தலை போலீசார் நேற்று வழக்குப் பதிவு செய்தனர்.

தொடர்புடைய செய்தி