கூடலூரில் அனுமதி இன்றி மண் அள்ளிய 8 பேர் மீது வழக்கு

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கூடலூர் கிராமத்தில் செட்டியார் கோவில் அருகே உள்ள இடத்தில் பட்டா நிலங்களில் உரிய அனுமதி இன்றி 2.5 மீட்டர் ஆழத்தில் குழி வெட்டி மண் அள்ளப்பட்டுள்ளது. 

இதுகுறித்து தகவல் அறிந்த கூடலூர் கிராம நிர்வாக அலுவலர் ராமநாதன் அளித்த புகாரின் பேரில் அனுமதி இன்றி மண் அள்ளிய இடத்தின் உரிமையாளர்களான தேவராசு, லட்சுமணன், பெருமாள், பாலசுப்பிரமணியன், பாப்பாத்தி, லட்சுமி, மாரிமுத்து, தமிழரசி ஆகிய 8 பேர் மீது தோகைமலை போலீசார் நேற்று (ஜூலை 31) வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி