கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தண்ணீர்பள்ளியில் உள்ள வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு உதவி வேளாண்மை அலுவலர்கள் சங்கத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான நாட்காட்டி மற்றும் நாட்குறிப்பு வெளியிடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. 1956 ஆம் ஆண்டு அரசு அங்கீகாரத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த சங்கம் 70 ஆண்டுகளை கடந்து 71 ஆம் ஆண்டிற்கான சேவையை தொடர்ந்து 2026 ஆம் ஆண்டிற்கான நாட்காட்டி மற்றும் நாட்குறிப்பு மாவட்ட தலைவர் ரஞ்சித் குமார் வெளியிட்டார். மூத்த உறுப்பினர் கணேசன் இதை பெற்றுக்கொண்டார்.