கரூர் மாவட்டம் குளித்தலை அருகே லாலாபேட்டை தனியார் பள்ளி அருகே சாலையில் சென்றபோது, முகேஷ் ஓட்டி வந்த பைக் எதிரே மோதியதில் சுகாஸ் (17) என்ற இளைஞர் இடது காலில் படுகாயம் அடைந்தார். அவர் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சுகாஷின் தந்தை நாகராஜன் அளித்த புகாரின் பேரில் லாலாபேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.