இந்நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட தலைவர் செந்தில்நாதன், தேர்தல் வந்துவிட்டாலே பொய் பித்தலாட்டத்தை ஆரம்பிக்கிற கட்சி எதுனா அது திமுகதான், மும்மொழி கொள்கையை எப்படி மறக்கடிக்கிறது, டாஸ்மாக் ஆயிரம் கோடி ஊழலை எப்படி மறக்கடிக்கிறது என தொடர்ந்து எதோ பொய்யான திட்டத்தை எடுத்து மக்களுக்கு தெரிவிக்கின்றனர்.
மும்மொழி படிங்கனு மத்திய அரசு சொல்லுது, ஆனால் குடிக்க சொல்லி இந்த மாநில அரசு சொல்லுது... நிரந்தரமாக சாராய ஆலை, டாஸ்மாக்கை மூட வேண்டும், 1000 கோடி ஊழலை முன்னெடுத்துகின்ற இந்த திமுக அரசை இந்த தமிழ்நாட்டை விட்டு விரட்ட வேண்டும் என்ற ஒரு புதிய சபதத்தை எடுத்து பாஜக கட்சியினர் உழைத்து கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் குளித்தலை ஒன்றிய செயலாளர் ரஞ்சித்குமார் உள்ளிட்ட ஒன்றிய நிர்வாகிகள், மகளிரணியினர் என பலர் கலந்து கொண்டனர்.