குளித்தலையில் பீகார் வெற்றிக்கு பாஜகவினர் கொண்டாட்டம்

பீகாரில் பாஜக அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து, கரூர் மாவட்டம் குளித்தலை பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு பாஜக குளித்தலை ஒன்றிய மற்றும் நகரம் சார்பில் குளித்தலை ஒன்றிய தலைவர் ரஞ்சித்குமார் தலைமையில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் நமச்சிவாயம், ஒன்றிய செயலாளர் ஹரிராம்குமார் உள்ளிட்ட பாஜகவினர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி