குளித்தலையில் ஆட்டோ கன்சல்டிங் கடையில் பேட்டரி திருட்டு

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கீழ தாலியாம்பட்டியைச் சேர்ந்த கருணாநிதி (37) என்பவர் உழவர் சந்தை சாலையில் ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகன பழுது நீக்கும் கடை நடத்தி வருகிறார். அடிக்கடி பேட்டரி, உதிரி பாகங்கள் திருடு போனதால், 4 சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணித்து வந்துள்ளார். நேற்று மாலை 6:25 மணியளவில், அருகில் உள்ள கடைக்கு வந்த ஒருவர் கருணாநிதியின் கடையை நோட்டமிட்டு, உள்ளே நுழைந்து பேட்டரியைத் திருடிச் சென்றார். இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சி தற்போது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி