குளித்தலையில் புகையிலை தடுப்பு தலைக்கவசம் அணிய விழிப்புணர்வு

கரூர் மாவட்டம் குளித்தலையில் லயன்ஸ் கிளப் சார்பில் புகையிலை மற்றும் மது அருந்துவதை தடுப்பதற்கும், தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. குளித்தலை காந்தி சிலை முன்பு தொடங்கிய பேரணி, நீதிமன்றம் வழியாக சுங்க கேட் வரை சென்று நிறைவடைந்தது. இதில் தனியார் பள்ளி மாணவ மாணவியர்கள் 'தலைக்கவசம் உயிர்க்கவசம்', 'போதையின் பாதை சாவின் பாதை' போன்ற பதாகைகளை ஏந்தி கோஷமிட்டனர். காவல் ஆய்வாளர் கருணாகரன், லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் நாராயணன், அசோக், வழக்கறிஞர் சக்திவேல், பள்ளி தாளாளர் ரம்யா உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி