கரூர்: சீமை கருவேல மரம் அகற்ற ரூ.29.30 லட்சம் ஏலம்

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் பஞ்சப்பட்டி நீர் தேக்கத்தில் 1170 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள சீமை கருவேல மரம் அகற்றுவதற்காக இன்று 19ஆம் தேதி புதன்கிழமை 11 மணி அளவில் குளித்தலை அரியாறு பாசன பிரிவு அலுவலகம் அருகே உள்ள சார் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஏலம் விடப்பட்டது. 

அரியாறு பாசனப் பிரிவு உதவி செயற் பொறியாளர் கார்த்திகேயன், உதவி பொறியாளர் சுகுமார் ஆகியோர் முன்னிலையில் ஏலம் தொடங்கியது. முன்னதாக ஏலதாரர்கள் ரூ. 5 லட்சத்திற்கான வரை ஓலையை அதிகாரிகளிடம் கொடுத்து பதிவு செய்து கொண்டனர். அதில் மொத்தம் 54 பேர் ஏலதாரர்களாக கலந்து கொண்டனர். இறுதியாக கரிகாலன் என்பவர் ரூ. 29 லட்சத்து 30 ஆயிரத்திற்கு அதிகபட்சமாக கேட்டு முடித்து வைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி