வை. புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வை. புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் இன்று நடைபெற்றது. வட்டார கல்வி அலுவலர் ரமணி தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி மைய மேற்பார்வையாளர் ராகுகாலம் முன்னிலை வகித்தார். பள்ளி மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சி போட்டி நடத்தப்பட்டது. 

பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மைக் குழு, சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், காலை உணவு பணியாளர்கள், இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள், மற்றும் மாணவ மாணவிகள், பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள், பள்ளியின் முன்னாள் மாணவர்கள் என பலரும் திரளாகக் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி