குளித்தலையில் அனைத்து கட்சி பிரமுகர்கள் ஆலோசனைக் கூட்டம்

கரூர் மாவட்டம் குளித்தலை சார் ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் ஆணையத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆலோசனைக் கூட்டம் சார் ஆட்சியர் சுவாதி ஸ்ரீ தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நேர்முக உதவியாளர் மகுடேஸ்வரன், வட்டாட்சியர்கள் குளித்தலை இந்துமதி, கிருஷ்ணராயபுரம் பிரபாகர் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். 

இந்த ஆலோசனை கூட்டத்தில் தேர்தலில் அமைக்கப்பட்டுள்ள வார்டு வாரியாக வாக்குச்சாவடி மையம் அமைத்தது போல் சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தலில் அமைக்க வேண்டும். இறந்து போன வாக்காளர்கள் பெயர்களை நீக்கம் செய்ய வேண்டும். வாக்களிக்காமல் உள்ள பெயர்கள் நீக்கம் செய்ய வேண்டும். வாக்காளர்களுக்கு வாக்குச் செலுத்தும் வகையில் எளிமையான முறையில் அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு பள்ளி மற்றும் அரசு கட்டிடங்களில் வாக்குச்சாவடி மையம் அமைக்க வேண்டும் என்பதை உள்ளிட்ட கோரிக்கைகளை அனைத்து கட்சிகளும் சார்பிலும் முன்வைத்தனர். 

மேலும் குளித்தலை காவல் நிலையம் முகப்பு வாசலை ஏற்கனவே அரசு ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டப்பட்டது போல் மீண்டும் அதே போல் காவல் நிலைய வாசல் அமைய வேண்டும் என அனைத்து அரசியல் கட்சி சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர், தேமுதிக, விசிக உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி