கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் பாகக் கிளை பொறுப்பாளர்கள், BLA -2 திறன் மேம்பாட்டு ஆலோசனைக் கூட்டம் குளித்தலை அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், சின்னசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். மேலும், மா. தொ. செயலாளர் திருநாவுக்கரசு, மா. பொருளாளர் கண்ணதாசன், மா. மாணவரணி அமைப்பாளர் சரவணன் மற்றும் பல்வேறு ஒன்றிய, நகர செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.