குளித்தலையில் பைக் மோதி ஸ்கூட்டியில் சென்றவர் படுகாயம்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மருதூரைச் சேர்ந்த முருகையன் (42) என்பவர் நேற்று முன்தினம் ராஜேந்திரம் சாலையில் ஸ்கூட்டியில் சென்றபோது, எதிரே வந்த சிவசங்கரின் யமஹா பைக் மோதியதில் காயமடைந்தார். முருகையனுக்கு வலது கால் மற்றும் வயிற்றில் காயம் ஏற்பட்டது. அவர் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து முருகையனின் மனைவி கமலா அளித்த புகாரின் பேரில், குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி