கரூர் மாவட்டம் குளித்தலை அருகே புதுப்பாளையம் எம்ஜிஆர் நகரில் ஸ்ரீ சாந்த சொருப ஆஞ்சநேயர் மற்றும் விநாயகர் சுவாமியுடன் கோவில் அமைந்துள்ளது. நேற்று அனுமன் ஜெயந்தி முன்னிட்டு ஆஞ்சநேயர் மற்றும் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, உத்தேசமாக தயாரிக்கப்பட்ட 40000 வடமாலைகள் சாற்றப்பட்டன. மேலும் ஆஞ்சநேயருக்கு துளசி மாலை ஸ்ரீராமஜெயம் எழுதப்பட்ட காகித மாலைகளும் அணிவிக்கப்பட்டு சிறப்பு அர்ச்சனைகள் பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் பக்தர்களுக்கு வடை பிரசாதமாக வழங்கப்பட்டன. இதில் புதுப்பாளையத்தை சுற்றியுள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.