கரூர் மாவட்டம் குளித்தலை அருகே, மாற்றுத்திறனாளி சின்னசாமி (37) ஓட்டி வந்த மூன்று சக்கர வாகனம் மீது பைக் மோதியதில், சின்னசாமி, ராஜலிங்கம், ஜீவானந்தம் என மூன்று பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சின்னசாமி அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.