இதனை தொடர்ந்து அந்த கடைகளுக்கு வாடகை உயர்த்த நகர்மன்றத்தில் அனுமதி கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து மன்ற அனுமதிக்காக வைக்கப்பட்ட 27 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. அப்போது குறுக்கிட்ட நகராட்சி வார்டு உறுப்பினர் மன்ற பொருட்களை வைக்கும் முன்னர் அனைத்து வார்டு உறுப்பினர்களையும் வரவழைத்து தீர்மானப் பொருட்களை வார்டு உறுப்பினர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டுமெனவும் ஏற்கனவே கேட்டுக்கொண்டதால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வருவையொட்டி நகர்மன்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து நகர்மன்ற தலைவர் இனிப்புகள் வழங்கினார். இதில் நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.