கிருஷ்ணராயபுரத்தில் ஸ்கூட்டி மோதி 2 பேர் படுகாயம்

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பகுதியைச் சேர்ந்த அசோக் (35) மற்றும் ராஜா ஆகியோர் யூனியன் ஆபீஸ் அருகே நின்று கொண்டிருந்தபோது, ஜெரோம் கிறிஸ்டோபர் என்பவர் ஓட்டி வந்த ஸ்கூட்டி மோதி இருவரும் படுகாயமடைந்தனர். இருவரும் கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அசோக் அளித்த புகாரின் பேரில் மாயனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி