தோகைமலையில் மணல் கடத்திய 2 சகோதரர்கள் கைது

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தோகைமலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட தென்னகர் அரியாவூர் பாலம் பகுதியில் தோகைமலை சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் காளியப்பன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். 

அப்போது திருட்டுத்தனமாக டிராக்டர் டிப்பரில் ஜேசிபி கொண்டு மணல் கடத்திக் கொண்டிருந்தது தெரிய வந்தது. அதனையடுத்து மணல் கடத்தலில் ஈடுபட்ட மேல வெளியூர் பகுதியைச் சேர்ந்த வீரப்பன் மகன்கள் வேலுச்சாமி 40 மற்றும் முருகேசன் 32 ஆகிய இரண்டு பேர் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் ஒரு ஜேசிபி, ஒரு யூனிட் மணலுடன் டிராக்டர் டிப்பர் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி