கரூர் மாவட்டம் குளித்தலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில், போலீசார் நேற்று அதிரடி நடவடிக்கை எடுத்தனர். இரும்பூதிப்பட்டி சந்தையில் மது விற்ற மகாமுனி மனைவி லோகேஸ்வரி (40) மற்றும் குளித்தலை காவிரி பாலம் அருகே மது விற்ற முத்தையன் மகன் பாக்கியராஜ் (33) ஆகிய இருவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். மேலும், விற்பனைக்கு வைத்திருந்த மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.